புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் (23.04.2025) புதுக்குடியிருப்பு புதியகுடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்ட போது 330 லீற்றர் கோடாவும், 20 லீற்றர் கசிப்பும், கசிப்பு விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட பெறுமதியான மோட்டார் சைக்கிளும், 15 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் தப்பியோடியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
