களுத்துறை, பண்டாரகமை, யட்டியன பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து நபரொருவரை வாளால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தந்தையும் மகனும் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.