புத்தளத்தில் போலி வாக்குச்சீட்டுகள் வைத்திருந்தவர் கைது

இன்று (மே 6) புத்தளம் – இரத்மல்யாய பகுதியில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில், 8 போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்த போலி வாக்குச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version