சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் (20) துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியுள்ளனர்.

பளைப் பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற பாரவூர்தி எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது குறித்த பாரவூர்தி நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது.

இதையடுத்து பொலிஸார் குறித்த பாரவூர்தியை தமது வாகனத்தில் துரத்திச் சென்ற நிலையில் பரவூர்தியின் ரயர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து குறித்த பாரவூர்தியை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற பாரவூர்தியை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version