வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் நடாத்தப்படும் ஆனைக்கோட்டையில் உள்ள சித்த மருந்தகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி கலைவாணியின் பல்வேறு திருவிளையாடல்கள் அம்பலமாகியுள்ளன.
குறித்த வைத்தியரின் கணவர் புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் நிலையில் இவர் மேற்படி மருந்தகத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் கருகம்பனையில் உள்ள சித்த வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்மீது முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சித்திரை மாதம் 1 ஆம் திகதி ஆனைக்கோட்டை மருந்தகத்துக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
அந்தவகையில் குறித்த வைத்தியரை தேடி 35 வயதுடைய நபர் ஒருவர் அடிக்கடி மருந்தகத்துக்கு வருவதாகவும், இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் தெரியவருகின்றது. இருவரும் மருந்தகத்தின் உள்ளேயும் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து 119 என்ற அவசர காவல்துறை சேவைக்கும் தகவல் வழங்கிய நிலையில் மானிப்பாய் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பிறிதொரு நாள் குறித்த நபர் வைத்தியரின் கைபேசியை பறித்துச் சென்றபோது வைத்தியர் அவரை துரத்தியபடி சென்றுள்ளார். இதன்போது இருவருக்குமிடையே வீதியில் வைத்தும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மருந்தகத்தின் உள்ளேயும் வந்து அமர்ந்திருக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இல்லாத நேரத்தில் இருவரும் மருந்தகத்தில் அந்நியோன்னியமாக பழகுவதும், பிரச்சினை வரும்போது அடிபடுவதும் வழமையாக காணப்படுகிறது.
இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் மருந்தகத்துக்கு செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் குறித்த வைத்தியர் நேரகாலத்துக்கு வைத்தியசாலைக்கு செல்வதும் கிடையாது. இதனால் வருகின்ற நோயாளிகள் காத்திருப்பதும், திரும்பிச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த பிரச்சனைகள் அனைத்தும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கும், செயலாளர் சபேஸுக்கும் தெரிந்திருந்தும் அவர்கள் இந்த பிரச்சனைகளை மூடி மறைப்பதற்கு முயற்கின்றார்களே தவிர பிரச்சனைக்கு தீர்வு வழங்க முயற்சிக்கவில்லை என தெரியவருகிறது. மேலும் இன்றையதினம் மருந்தகத்துக்கு சென்ற நோயாளி ஒருவர் 2.30 மணி கடந்தும் வைத்தியர் கடமைக்கு வருகை தராத நிலையில் பிரதேச சபையின் செயலாளர் சபேஸுக்கு அழைப்பு மேற்கொண்டவேளை அந்த நோயாளியை அச்சுறுத்தும் வகையில் அவர் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் செயலாளர் சபேஸுக்கும் குறித்த பெண் வைத்தியருக்குபிடையே என்ன தொடர்பு உள்ளது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
எனவே உரிய தரப்பினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக காணப்படுகிறது.