இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசினை நேற்று (16) ஒருவர் வென்றுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் 2210 ஆம் எண் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற 474,599,422 கோடி ரூபா பரிசுத் தொகை இதுவாகும்.
வெற்றி பெற்ற அதிர்ஷ்ட சீட்டை கோகரெல்லாவைச் சேர்ந்த விற்பனை முகவர் ஒருவர் விற்றார்.
முன்னதாக, இலங்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசுக்கான சாதனை ரூ. 230 மில்லியனாக இருந்தது.
இதுவும் மெகா பவர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் இருந்தே கிடைத்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வெற்றியாளரின் பெயர் விபரம் அறிவிக்கப்படவில்லை.