சுமார் 4 கோடியே 69 இலட்சம் பெறுமதியான பணம், கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், நிறுவனமொன்றின் பணம் வசூலிப்பாளர் உட்பட மூவர் நீர்கொழும்பு கட்டான காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பணம் வசூலிப்பாளர் கடியல பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது உந்துருளியில் பயணித்த இருவர், தம்மிடமிருந்து பணத்தை அபகரித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் குறித்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கமராவை ஆய்வு செய்தபோது, குறித்த பண வசூலிப்பாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும் திட்டமிட்டு இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பணம் வசூலிப்பாளர், அவரது வாகன சாரதி மற்றும் அவரது உறவினர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.