இலஞ்சம் பெற்ற ஒருவர் கைது..!

நேற்று (7) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 50,000 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.

இதனையடுத்து, பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் இன்று மதியம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version