வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை துரத்தித் துரத்தி தாக்கிய நபர்கள்.!

திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் முன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தித் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் முக்கிய பேசுபொருளாகி வருகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பெண்ணிடம் சில நபர்கள் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் அவரது கணவர் கேட்கச் சென்றபோது அவரை இரு நபர்கள் துரத்தித் துரத்தி தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக உப்புவெளி பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் குற்றம் அதிகரிக்கும். சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைவதுடன் நாட்டிற்கு அபகீர்த்தியும் ஏற்படும்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம். குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

Exit mobile version