கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

கொழும்பில் பொரளை – லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் நேற்று (08) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version