துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!

ராகம, பட்டுவத்தை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, படுவத்தை பகுதியில் நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சந்தேக நபரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக களனி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடம் 9 கிலோகிராம் 220 கிராம் ஹெராயின், 67 கிலோகிராம் 520 கிராம் கேரள கஞ்சா, 2 சப்மெஷின் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஒரு வாள், விமானப்படை சீருடைகள், 4 கைபேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் 4 தராசுகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version