பாணந்துறையில் நித்திரையில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு..!

பாணந்துறை, ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இன்று வெள்ளிக்கிழமை (11) தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனந் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் சந்தேக நபர்களைக் கைதுசெய்ய 3 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குடு சலிந்து மற்றும் நிலங்க இடையேயான மோதலில் குடு சலிந்துவின் தரப்பைச் சேர்ந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version