நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (10) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் இரத்மலானை ரயில் நிலையம் அருகே, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலும் 10 கிராம் 170 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சந்தேக நபர் கொழும்பு 14 ஐ சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அத்தோடு, தெமடகொடை பகுதியில் 51 கிராம் 01 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபரும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவின் லன்சியாவத்த பகுதியில் 05 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு -08 மற்றும் லன்சியாவத்த பகுதியைச் சேர்ந்த 24, 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.