அமுதக் கரங்கள் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்வரும் முதலாம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் திகதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version