ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும்   நாளை (24.02) முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது நாடு பூராகவும் பல பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, தற்போது ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல பதவி நிலைகளை வகித்து,வந்தவர். நாளை முதல் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செற்படும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க பொறுப்பேக்கவுள்ளார்    

 .

Exit mobile version