சாவகச்சேரியில் போலி அனுமதிப் பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்

போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சாவகச்சேரி பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர்.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் வழங்கும் ஆற்று மற்றும் தரை மணல் கொண்டு செல்ல தேவையான அனுமதிப்பத்திரத்தை போலி முறையில் தயாரித்து, அந்த அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி மணல் கடத்தல் செய்யப்பட்டிருந்தது.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைவர் பாலித செனவிரத்னவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி பிரதேச போதைப் பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் உள்ள தனங்கிழப்பு பகுதியில் குறித்த இரண்டு டிப்பர்களும் பிடிக்கப்பட்டன.

இந்த போலி அனுமதிப் பத்திரம் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரு சாரதிகளும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுவார்கள். ஒருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது.

Exit mobile version