மித்தெனிய முக்கொலை சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர்களுக்கு T-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 12 தோட்டாக்களை வழங்கியதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த முக்கொலை தொடர்பில் மித்தெனிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version