கிழக்கில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாத குழு – அமைச்சர் வெளியிட்ட தகவல்

இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இத் தீவிரவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்

இது குறித்து ஜனாதிபதி ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இவ் அமைப்பின் செயற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாதுகாப்பு தரப்பினர் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version