நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!

ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைரம்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 1 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version