செவ்வந்திக்கு பின்னால் இயங்கும் பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், மூளையாக செயற்பட்ட 25 வயது இஷார செவ்வந்தி இன்னும் கைது செய்யப்படவில்லை.

அதன்படி, பல பொலிஸ் குழுக்கள் அவர் மீதான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழலில் அவர் கடல் வழியாக படகில் தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version