பொலிஸ் அதிகாரியை கத்தியால் தாக்கிய வெலே சுதாவின் சகோதரன்

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரனுடைய கத்திக்குத்துக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்சம்பவம் நேற்று மாலை கல்கிஸ்ஸை, படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் கீழ் செயற்படும் படோவிட்ட பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், களுபோவிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையொன்றின் போது ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மடக்கிப்பிடித்து கைது செய்யமுற்படும் போது, சந்தேக நபர் தன் இடையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரின் வயிறு, முழங்கை என்பவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர் அப்பிரதேசத்தை விட்டும் தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிசார் அவரைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version