Home இலங்கை செய்திகள் கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது

கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது

16
0

தியகலை பகுதியில் 1360 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 2.6 அங்குல நீளமுடைய கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 4 மணியளவில் தியகலை பகுதியில் இடம்பெற்றது.

ஹட்டன் பொலிசார் வீதித்தடையொன்றை ஏற்படுத்தி சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் பேருந்துகளை சோதனை செய்தபோது, பௌத்த பிக்குவிடமிருந்து 1360 மில்லி கிராம் கஞ்சா மற்றும் ஒரு கஞ்சா சுருட்டு கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய பிக்குவாகவும், இவர் மெதிரிகிரியா பகுதியைச் சேர்ந்தவராகவும் தெரிந்துள்ளார். அவரை நாளை 3-ம் திகதி காலை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here