Home இலங்கை செய்திகள் அம்பாறையில் எண்ணெய் பரல்களை கடத்திய நபர் ஒருவர் கைது

அம்பாறையில் எண்ணெய் பரல்களை கடத்திய நபர் ஒருவர் கைது

5
0

அம்பாறையில் கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றில் நேற்று (13) அதிகாலை எண்ணெய் பரல்கள் களவாடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளரினால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதிக்கு வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட பரல்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், தப்பிச் சென்ற இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏறாவூர் மற்றும் செங்கலடி பகுதிகளில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here