கேகாலை தெரணியகல பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது, திக்வெல்ல கந்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வேட்பாளரும், மோதலில் காயமடைந்த மேலும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.