முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில், வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளராக உள்ள 38 வயது நபர் ஒருவர், வாக்குச் சாவடிக்கு அருகில் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தேர்தல் விதிமீறலாகக் கருதப்படுவதால், தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.