Home இலங்கை செய்திகள் யாழில் வன்முறைக் கும்பல் வாள்களுடன் கைது..!

யாழில் வன்முறைக் கும்பல் வாள்களுடன் கைது..!

9
0

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் கடந்தவாரம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டிருந்தது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதற்கமைய சந்தேக நபர்கள் மறைந்திருக்கும் இடங்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கெலும்பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சுற்றி வளைப்பில் மூவரை கைது செய்ததுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைபொருள் என்பன கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு சந்தேக நபர் சட்டத்தரணியூடாக சரணடைந்துள்ளார். இவர்களிடமிருந்தும் வாள்களும் மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here