BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

மீண்டும் ஒரு சுவிஸ் குமாரா? – 11 பெண்களை சீரழித்த சுவிஸ் சுரேஸ்குமார்.!

இலங்கையின் தமிழ்ப் பெண்களை குறிவைத்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா சுரேஸ்குமார் என்பவர் காம வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த நபர் திருமணம் செய்து இவருக்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் முதலாவது மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து ஒரு ஆண் பிள்ளையுடன் சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் குறித்த நபர் இலங்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களை இலக்கு வைத்து பண ஆசையைக் காட்டி தனது காம இச்சைகளுக்கு அவர்களை பயன்படுத்தி வருகின்றார். இவரால் 11 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவரது காம லீலைகள் பல திடுக்கிடும் தகவல்களை தந்தவண்ணம் உள்ளது.

இவரது குறித்த நடவடிக்கைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் சோபனா எனும் 24 வயதுப் பெண்ணை திருமணம் செய்வதாகவும், சுவிஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி உறவில் ஈடுபட்ட நிலையில் அவர் கர்ப்பம் தரித்தார். இதனை அறிந்த அவர் குறித்த பெண்ணை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தற்கொலைக்கு முயன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபர் சுவிஸ் நாட்டிற்கு தப்பியோடியுள்ளார் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சோபனா அவர்களை வினவிய போது, குறித்த சம்பவம் உண்மை எனவும் இவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பல பெண்களின் தகவல்களையும் வழங்கியுள்ளார்.

குறித்த நபர் யுத்தத்தில் வீர மரணமடைந்தவரின் மனைவி மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களையுமே இலக்கு வைத்து தனது காம லீலையை அரங்கேற்றி வருகிறார்.

இவரது காம லீலைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின் நடவடிக்கை தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் தொடர்பில் எங்கு சென்று முறைப்பாடு செய்தாலும் அங்குள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொடுத்து, விருந்துபசாரம் நடத்தி அவர்களை தனது கைக்குள் போட்டுக்கொண்டு தனது நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

எனவே குறித்த நபர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக அவசர வேண்டுகோளை நாடி நிற்கின்றோம்.

குறித்த நபர் தொடர்பான பல ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது. இது தொடர்பிலான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் அதனை வழங்கத் தயாராக உள்ளோம்.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை அம்பலப்படுத்தி குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts