புத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பௌத்த துறவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வரிசை வழியாக தலதா மாளிகைக்குள் நுழைய முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.