அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Anuradhapura) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று (17) அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேகநபர் கடந்த 10 திகதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பெண் வைத்தியரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அநுராதபுரம் மற்றும் கல்னேவ காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் அநுராதபுரம் சிறப்பு அதிரடிப் படையினரால் கல்னேவ காவல் பிரிவில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கல்னேவ, எல வீதியில் வசிக்கும் 34 வயதுடையவர் சந்தேக நபர், மற்றைய காவல் பிரிவுகளில் செய்த குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருவதால், மேலதிக விசாரணைக்காக அது அநுராதபுரம் தலைமையக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாதொரு பின்னணியில், சந்தேகபர் பெண் வைத்தியரின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக எடுத்து, மிரட்டி, அதன் கடவுச்சொல்லைப் பெற்று பின்னர் அதே தொலைபேசியிலிருந்து அவரது புகைப்படங்களை எடுத்துள்ளது தெரியவந்துள்ளளது.
அதன்போது, சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், இது குறித்து யாரிடமாவது சொன்னால், அவரது புகைப்படங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என வைத்தியரை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.