BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை (10) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், ஹோமாகம மாற்று வீதி இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் இன்றி பாழடைந்து இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடைபொலிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts