Home இலங்கை செய்திகள் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு சொகுசு ஜீப் வாகனம்!

போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு சொகுசு ஜீப் வாகனம்!

7
0

போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு ஜீப் வாகனம் ஒன்று கண்டி – கால்தென்ன பிரதேசத்தில் தெல்தெனிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

தெல்தெனிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த சொகுசு ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சொகுசு ஜீப் வாகனமானது கால்தென்ன பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பணிபுரியம் பூசாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக தெல்தெனிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here