மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் மித்தெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் உயிரிழந்தனர்.
உந்துருளியில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவத்தின் போது உந்துருளியை செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இவ்வாறு இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், நாடு கடத்தப்பட்டுள்ளார்.