BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

யாழில் சிறுமி துஸ்-பிரயோகம்: இரு பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து, பணம் சம்பாத்தித்து வந்துள்ளனர்.

தாம் பணம் பெற்றுக்கொண்ட போதிலும் , சிறுமிக்கு பணம் கொடுக்காது இனிப்பு பண்டங்களை மாத்திரம் வழங்கியுள்ளனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி , தனது உறவினர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரிவித்தமையை அடுத்து , வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , சிறுமியை வன்புணர்ந்த ஏனைய ஆண்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts