பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 338 கிலோ கஞ்சா நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது என்று கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 39 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தும் நகர்வுகளும் இடம்பெற்று வருகின்றன.