இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 கிலோ மஞ்சள் மண்டைதீவுக் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, மேற்படி மஞ்சள் பொதிகள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர் சான்றுப்பொருள்களுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.