வவுனியா மத்திய பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு உடலில் காயங்கள் ஏற்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மெலும் தெரியவருவது,
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவகின்றது. இதனால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.