Home இலங்கை செய்திகள் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலால் வீசிய சம்பவம்: நீதிமன்றம் உத்தரவு

மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலால் வீசிய சம்பவம்: நீதிமன்றம் உத்தரவு

15
0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி மற்றும் அவளை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர்களை 28.02.2025 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவர்கள் இருவரையும் எதிர்வரும் 7ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவத்தின் விவரங்கள் அடிப்படையில், 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு, 18 வயதுடைய மாணவி ஒருவர், வயிற்றுவலி எனக் கூறி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மாணவி, ஆரம்ப சிகிச்சை பெறும் போது, அதிகாலை 5.00 மணிக்கு மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து, ஜன்னல் வழியாக வீசினார்.

அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்ட தாதியர்கள் அங்கு சென்று, குழந்தையை மீட்டனர். அதைத் தொடர்ந்து, குழந்தையை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மாணவிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here