பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (03.03.2025) காலை 6 மணியளவில் குருவிட்ட ( Kuruvita) – எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் எரத்ன பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் இருவர் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு (Teaching Hospital – Ratnapura) மாற்றப்பட்டுள்ளனர்.
மாணவர்களில் இருவரை இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தாலும், வேறொரு வைத்தியசாலையிலிருந்து ஆம்பியூலன்ஸ் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.