Home இலங்கை செய்திகள் தேசபந்து தென்னகோனைத் தேடி சாகல ரத்நாயக்கவின் வீட்டில் சோதனை!

தேசபந்து தென்னகோனைத் தேடி சாகல ரத்நாயக்கவின் வீட்டில் சோதனை!

5
0

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்க பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க,

குறித்த வீட்டைப் பரிசோதிக்க தம்மிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்குத் தாம் அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்யுமாறு அறிவித்து அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் இதுவரையில் தொடர்ந்து தேடப்படுவதுடன் தமது கைது நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தி நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here