அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை(13) கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்மாந்துறை அதிகாரிகள் குறித்த தேக்க மரப்பலகைகளை மீட்டுள்ளனர்.
குறித்த தேக்க மரப்பலகைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.