BREAKING

இலங்கை செய்திகள்

கொழும்பில் தமிழ் வர்த்தகர் படுகொலை : வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு

கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி கொழும்பு – கொட்டாஞ்சேனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் தமிழ் வர்த்தகரான சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் சசிகுமாரை கொலை செய்யுமாறு வெளிநாட்டில் இருந்து உத்தரவு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. துபாயில் உள்ள பழனி என்பவரே இந்த படுகொலை சம்பவத்திற்கு உத்தரவு வழங்கியதாகவும் விசாரணைகளின் பின்னர் கூறப்பட்டது.

இருப்பினும், சசிகுமார் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மீது நீதிமன்றமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அது மாத்திரமன்றி, இந்த துப்பாக்கி சூடு மீது பொலிஸார் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts