Home இலங்கை செய்திகள் சர்ச்சைக்குரிய தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு – பல தடயங்களை கைப்பற்றிய பொலிஸார்

சர்ச்சைக்குரிய தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு – பல தடயங்களை கைப்பற்றிய பொலிஸார்

5
0

பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி வந்த தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு சொந்தமான ஹோகந்தர வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் குறித்த வீடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வீட்டில் சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் அவரை இதுவரையில் கைது செய்ய முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டு சந்தேகத்திற்கிடமான பாரிய அளவிலான பொருட்களை அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் எடுத்து சென்றுள்ளனர். மேலும் தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை பட்டியலிடுவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here