BREAKING

இலங்கை செய்திகள்

காதலியை கொன்று விட்டு சரணடைந்த காதலன் – புத்தளத்தில் நடந்த பயங்கரம்

புத்தளம் பகுதியில் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். வென்னப்புவ, பாடசாலை ஒன்றுக்கு அருகில் வசித்து வந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயது சந்தேக நபருடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளார். எனினும் காதலை முறித்து உறவை முடிவுக்கு கொண்டு வருவதாக காதலி தெரிவித்தமையினால் ஆத்திரமடைந்த இளைஞன் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காதலியின் வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

நேற்று மாலை சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts