BREAKING

இலங்கை செய்திகள்

யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை மறுப்பு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மல்லாகம் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவானது இன்று (14) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு, மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்போது, சமூக மட்டத்தில் இவரது செயற்பாடுகள் சர்ச்சைக்குரிய நிலையிலும் பல குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாலும் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், யூடியூப்பர் கிருஷ்ணா தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts