சுன்னாகம் பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
சுன்னாகம் பொலிஸ் நிவையத்தின் ABV – 1518 என்ற இலக்க முச்சக்கர வண்டியில் செல்லும், நவில் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு இலஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியில் செல்லும் பொலிஸார், கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் என்று கூறி, கடைகளில் ஏதாவது குறை இருக்கிறதாக காண்பித்து அதற்கு இலஞ்சம் பெற்று வருகின்றனர். இது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
கடந்த காலங்களில் சுன்னாகம் பொலிஸார் குறித்தான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்து பின்னர் அவர் திரும்பிச் சென்று சில மணி நேரங்களில் ஒரு பாரிய குற்றச்செயலை பொலிஸார் புரிந்திருந்தனர். இதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றமும், பணியிடைநிறுத்தமும் வழங்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் கூட சுன்னாகம் பொலிஸார் திருந்தவில்லை என்பது மக்கள் மத்தியில் விசனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.