சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக, ஈழத்து பெண் ஹனிஷா சூசை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹனிஷா சூசை, சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக நியூயார்க்கில் பணியாற்றுகிறார்.
ஈழத் தமிழராக இவர் பெற்ற பட்டபடிப்பு அறிவு, அனுபவங்கள் மற்றும் இவருடைய சமத்துவம் என்பன சமூகத்தின் மீதான பற்றுதலுக்கு அடித்தளமாயின என்று சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இவருடைய பெற்றோர் மற்றும் சமூகத்தின் தொண்டுபணிகள் ஹனிஷாவை சிறுவயதிலேயே ஊக்கப்படுத்தின. இதன் விளைவாக, ஈழத்தில் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலைகளுக்கு கொடை திரட்டுதல், ஏதிலிகளுக்கான குழந்தைகளுக்கு நத்தார் பரிசுகள் வழங்குதல் போன்ற பொதுப்பணிகளில் இளவயதில் தொண்டாற்ற ஈடுபட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனிஷாவின் முதல் பெரிய பொது நடவடிக்கையானது, ஐ.நா.வில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மாநாடு ஆகும். இதற்கு முன்னர் இவ்வாறு சுவிற்சர்லாந்து சார்பில் இளைஞர் பிரதிநிதியும் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.