BREAKING

இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிபதியும் எழுத்தாளரும் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விவாகரத்து வழக்கு ஒன்று தொடர்பில் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கதுருவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts