BREAKING

இலங்கை செய்திகள்

பட்டலந்த விவகாரம் : நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எந்தவொரு அரசாங்கமும் சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தனிநபர்களை அடிப்படையாகக் கொண்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தினால் அது நியாயமானதாக இருக்காது.

அத்தோடு, மற்றைய பக்கத்தில் அவர்கள் இவற்றையெல்லாம் தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்த முற்பட்டால் அதற்கு சந்தர்ப்பம் வழங்குவது சரியான விடயமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts