BREAKING

இலங்கை செய்திகள்

“ஹரக் கட்டா” கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளகுழுவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹரக் கட்டா” சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிக்குக்குன்யா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினர் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பின் கீழ் “ஹரக் கட்டா” வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹரக் கட்டா” பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்

போதைப்பொருள் மோசடி கொலை கொள்ளை கடத்தல் பாதாளகுழு செயற்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய ஹரக் கட்டா” வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் சர்வதேச பொலிஸாரினால் மடகஸ்காரில் வைத்து கைது செய்யப்பட்டார்

மேலும் அவர் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்

இதனையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

மேலும் அவர் வழக்கு விசாரணை நிமித்தம் அவர் கடந்த 3 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஹரக் கடா திடீர் சுகயீனம் அடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts