சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் ஹட்டன் பகுதிகளைச் சேர்ந்த இந்த நான்கு பேர் இந்தியாவின் பெங்களூரிலிருந்து 6E-1183 என்ற இண்டிகோ விமானத்தில் இன்று அதிகாலை 01.00 மணியளவில் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வெளிநாட்டு விமான நிலையத்தில் உள்ள வரி அறவிடப்படாத வணிக வளாகத்தில் இருந்து வாங்கப்பட்ட சுமார் 15 மில்லியன் மதிப்புடைய 378 விஸ்கி போத்தல்கள், 20 பைகளில் பொதி செய்யப்பட்ட 132 கிலோகிராம் ஏலக்காயை சுங்க அதிகாரிகள் பயணப்பைகளிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களை தடுத்து வைத்து,விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.